ஆம்பூர் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனம் திருட்டு - ஆம்பூர் காவல் நிலையம்
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் நேதாஜி சாலையில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் பணியாற்றி வருகிறார். நேற்று (ஏப்ரல் 1) வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தை கடையின் வெளியே நிறுத்திவிட்டு சங்கர் வேலை பார்த்துள்ளார். அன்று மதியம் இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். கடையின் சிசிடிவி கேமராவில் அடையாளம் தெரியாத நபர் சங்கர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. உடனடியாக சங்கர் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனம் திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST