ஆதிபிரம்மோற்சவம் - நம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் எழுந்தருளினார்
திருச்சி: 108 திவ்யதேசங்களில் இரண்டாவதாக விளங்குவதும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் சார்பு கோயிலுமான உறையூர் கமலவல்லி நாச்சியார் ஸ்ரீரங்கநாதரின் மற்றொரு பத்தினியாக விளங்குவதால் இக்கோயிலில் பெருமாளுக்கென தனி உற்சவமூர்த்தி இல்லை. மாறாக, ஆண்டுக்கு ஒருமுறை திருவரங்கம் ரெங்கநாதர் கோயில் உற்சவர் நம்பெருமாள் பங்குனி நட்சத்திரத்தன்று இக்கோயிலில் எழுந்தருளி கமலவல்லி தாயாருடன் சேர்ந்து பக்தர்களுக்கு சேவைசாதிப்பார். ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர்திருவிழாவின் ஆறாம் நாளான இன்று (மார்ச் 15) நம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் எழுந்தருளிய சேவையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் அளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST