Video: லாரியை வழிமறித்து கரும்பை பிடுங்கி சாப்பிட்ட யானைகள் - video became viral
ஈரோடு - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகள் வீசும் கரும்புகளை சாப்பிட்டு பழகிய யானைகள், கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இந்நிலையில், ஆசனூர் - காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே லாரி ஒன்று கரும்புபாரம் ஏற்றிய வருவதை கண்ட யானைகள் லாரியை வழிமறித்து கரும்புகளை அதிலிருந்து கரும்புகளை எடுத்து சாப்பிட்டபடி நின்றன. அரை மணி நேரமாக யானை சாலையின் குறுக்கே நின்றதால் தமிழ்நாடு கர்நாடக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் கரும்புகளை சுவைத்துக்கொண்டிருந்த யானைகளை சப்தம் போட்டு காட்டுக்குள் திருப்பி அனுப்பினர்.