விளை நிலங்களை நோக்கி படையெடுக்கும் விலங்குகள்...கவலையில் விவசாயிகள் - திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பகுதிகளான பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை, அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை நிரந்தரமாக விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.