உண்மையான ஜல்லிக்கட்டுகளில் இத்திரைப்படத்தை படமாக்கினோம் - பேட்டைக்காளி இயக்குனர் ராஜ்குமார் - jallikattu
பேட்டைக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குனர் ல.ராஜ்குமார்,’’5 ஆயிரம் வருடங்களாக தமிழ்குடி பெண்களால் தான் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. படைப்பு சுதந்திரம் கொடுத்த எனது குரு வெற்றிமாறனுக்கு நன்றி. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. உண்மையான ஜல்லிக்கட்டுகளில் படமாக்கினோம். ஆண்டனி மற்றும் கலையரசன் உண்மையான பாய்ச்சல் மாட்டை அடக்கினர். அந்த மாடுகளுடன் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினோம்’’ என்றார்.