அடேங்கப்பா! இவ்வளவு தண்ணியா - கனகம்மாசத்திரம் அரசுப் பள்ளியைச் சூழ்ந்த மழைநீர் - வடகிழக்கு பருவமழை
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியைச் சுற்றி மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. வகுப்பறைகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கி நிற்கிறது. தற்போது வரையில் பள்ளியில் தேங்கிய நீரை வெளியேற்ற அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.