டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நிறுத்தம்: போலீசார் குவிப்பு - டெல்லி ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
டெல்லி ஜஹாங்கிர்புரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று (ஏப்ரல் 20) காலை தொடங்கியது. வடக்கு டெல்லி மாநகராட்சி கோரிக்கையின் பேரில் 400க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கிய நிலையில், உச்ச நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற தடைவிதித்து, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது.