கோவில்பட்டியில் விஜயகாந்த் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - Vijayakanth birthday celebration
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும் விஜயகாந்த் பூரண நலமுடனும் வாழ வேண்டும் என்றும் விளாத்திகுளம் தேமுதிக கிழக்கு ஒன்றியம் சார்பில் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யப்பட்டது. தொடர்ந்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக நிறுவப்பட்ட தேமுதிக கொடிகம்பத்தில் கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.