Watch: சத்தியமங்கலம், குட்டிகளுடன் சாலையை கடந்த யானை கூட்டம் - பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்திற்கு காட்டு யானைகள் வருகை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்திற்கு காட்டு யானைகள் தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (ஜூன் 2) பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதிக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வனப்பகுதி வழியாக காராச்சிக்கொரையில் இலிருந்து தெங்குமரஹாடா செல்லும் தார் சாலையை கடந்து சென்றன. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சாலையை கடந்து செல்வதைக் கண்டு அச்சமடைந்தனர். வனப்பகுதியில் உள்ள சாலைகளில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
TAGGED:
BhavaniSagar Dam