ஆசனூர் சாலையில் புள்ளிமானை வேட்டையாடும் செந்நாய்கள்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! - ஆசனூர் சாலையில் புள்ளிமானை வேட்டையாடும் செந்நாய்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் அண்மையில் பெய்த மழையால் புற்செடிகள் முளைத்து துளிர்விட்டு பச்சை பசேலென காட்சியளிக்கிறது. இதனால் சாலையோரங்களில் புள்ளிமான்கள் மேய்ச்சலுக்காக வருகின்றனர். புள்ளிமான்கள் அதிகளவில் உலவுவதால் செந்நாய்கள் அங்கு படையெடுத்துள்ளன. இந்நிலையில் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஆசனூரில் சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமானை செந்நாய்கள் கூட்டமாக தாக்கி வேட்டையாடுவதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இதையடுத்து, செந்நாய்கள் கூட்டமாக சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் சாலையில் இறங்கி நிற்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.