Video: காரை தாக்கி கண்ணாடியை பறக்கவிட்ட யானை - திக் திக் நிமிடங்கள்... - காரப்பள்ளம் சோதனைசாவடி
ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே ஆசனூருக்கு சென்ற காரை யானைக் கூட்டம் துரத்தின. அத்தோடு, யானை ஒன்று அந்த காரை தும்பிக்கையால் பலமாக தாக்கியதால், காரின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி தனியாக பறந்தது. இதானால், காருக்குள் இருந்தவர்கள் செய்தவறியாது திகைத்தனர். பின்னர் வாகன ஓட்டிகள் சத்தம் போட யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.