Video: வீட்டின் அருகே தூங்கிய பெண்மீது ஏறி படமெடுத்த நல்லபாம்பு.. - கல்புர்கி
கல்புர்கி(கர்நாடகா): வீட்டின் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவர் மீது, ஆறு அடி நீளம் உள்ள நல்லபாம்பு ஒன்று ஏறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் செய்வதறியாமல் திகைத்தார். தொடர்ந்து, அப்பெண் பயத்தில் நடுங்கத் துவங்கினார். இதனையடுத்து அங்கிருந்த பாம்பு அவரை ஏதும் செய்யாமல் தானாக திரும்பிச் சென்றது. இதனை அப்பகுதியில் இருந்தவர் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக்லப் பரவி வருகிறது.