குன்னூர் டைகர் ஹில்ஸ் பகுதியில் நடமாடும் சிறுத்தை - வனத்துறை எச்சரிக்கை
நீலகிரி மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் அண்மைக் காலமாக கரடி, காட்டு எருமை, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் நேற்று (ஜுன் 2) குன்னூர் டைகர் ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தையை நடமாட்டம் தென்பட்டது. இதனை அவ்வழியாக காரில் சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.