மூவர்ணத்தில் ஜொலிக்கும் வேலூர் கோட்டை...! - 75ஆவது சுதந்திர தினம்
வேலூர்: 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், இந்திய விடுதலை போராட்டங்களுக்கு முதன் முதலில் வித்திட்ட 1806 சிப்பாய் புரட்சி நடைபெற்ற அகழியுடன் கூடிய வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையின் ஒரு பகுதியை மூவர்ண கொடி வர்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். இதனை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.