'எய்ம்ஸ்' செங்கலை திருடினாரா உதயநிதி ஸ்டாலின் - பின்னணி என்ன? - udhayanidhi stalin stole aiims foundation stone
உச்சகட்டமாகத் தகித்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு தேர்தல் களம். திட்டங்களைச் சாதனைகளை எதிர்க்கட்சிகளின் இயலாமைகளைச் சொல்லி வாக்கு கேட்டது எல்லாம் போய் தேநீர்ப் போட்டுக்கொடுத்து, துணிதுவைத்து, பஜ்ஜி சுட்டு என விதவிதமாக மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் கவர விதவிதமான முயற்சிகளை வேட்பாளர்கள் செய்துவருகின்றனர். இந்த ட்ரெண்டை கொஞ்சம் வித்தியாசமாகக் காட்சிப்படுத்த நினைத்து, பாஜக அதிமுகவை விமர்சித்த உதயநிதி ஸ்டாலினின் எய்ம்ஸ் ஆயுதத்தை கையில் எடுக்க, அது மீம்ஸ் கிரியேட்டர்களுக்குத் தீனிபோட்டதோடு இல்லாமல் வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அந்தக் கதையை இந்தத் தொகுப்பில் காணலாம்.