உதயநிதி முன்பே அரசியல் பேசிய சிவகார்த்திகேயன் - டான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா
சென்னையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, ராஜூ, பாலசரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், “படம் நன்றாக இருந்தால் எந்தமொழியாக இருந்தாலும் வெற்றிபெறும் என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். இப்படத்தில் நடித்துள்ள அனைவருமே கதாபாத்திரங்கள்தான். உங்களுடைய வாழ்க்கையை இப்படம் பிரதிபலிக்கும்" என்று கூறினார். குறிப்பாக ட்ரைலரில் அரசியல் குறித்து சர்ச்சையான ஒரு வசனம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.