இந்திய வரைபடம் போல் நின்று மாணவர்கள் சாதனை முயற்சி! - அசத்தல் வீடியோ - STUDENTS
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் 73ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 50 ஆயிரம் சதுரடியில் இந்திய வரைபடத்தை மாணவர்கள் வரைந்தனர். இதில் சாதிமத பேதங்களைக் கடந்து ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் கலாசாரத்தை உணர்த்தும் வகையில் உடை அணிந்தும், வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்திய வரைபடம் போல் நின்று சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.