ஸ்ரீரங்கம் - சிம்மவாகன சிறப்பு ஆரத்தி..!
பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதும் 108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாள்கள் 'விருப்பன் திருநாள்' எனப்படும் உற்சவர்கள் வலம் விழா தேர் திருநாள் வரை விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(ஏப். 23) காலை நம்பெருமாள் சித்திரை தேர் 'விருப்பன் திருநாள்' நம்பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். புறப்பாடு, வீதி உலா நடைபெற்றது. நம்பெருமாள் சித்திரைத் திருவிழாவில் சிம்ம வாகனத்தில் காட்சியளித்தார்.