கோடையில் மஞ்சள் காமாலையைத் தவிர்க்க மருத்துவர்கள் கூறும் வழிகள் என்ன?
திருச்சி: கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு அடுத்தபடியாக பலரையும் பயமுறுத்துவது மஞ்சள் காமாலை நோய். வெயில் காலத்தில்தான் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற ஒரு கருத்து பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இதுகுறித்து திருச்சி அரசு பொது மருத்துவமனையின் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் கே.ராஜசேகரன் மற்றும் பொது அறுவை சிகிச்சை பாட பேராசிரியர் செந்தில் வேல் ஆகியோர் கோடை காலத்தில் மக்கள் பின்பற்றவேண்டிய அறிவுரைகள் குறித்து விளக்கியுள்ளனர்.