கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் காட்டுயானைகள் வருகை - சுற்றுலாப்பயணிகள் பார்வையிட அனுமதி மறுப்பு
திண்டுக்கல்: கொடைக்கானலில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு சுற்றுலாப் பணிகள் அதிகம் விரும்பும் சுற்றுலாப் பகுதியான பேரிஜம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்குச் செல்வதற்கு வனத்துறை இடம் சிறப்பு அனுமதி வாங்கிச்செல்ல வேண்டும். தற்போது பேரிஜம் ஏரிக்கு யானைகளின் நடமாட்டம் இருந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்தச்சூழலில் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறை தடை விதித்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் யானையை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.