ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - காவிரி ஆற்றில் வெள்ளம்
தர்மபுரி: க காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை 11) காலை நிலவரப்படி நீர்வரத்து 22,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தடை விதித்துள்ளார்.