Video: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத்தடை! - மணிமுத்தாறு அருவி
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர். கடந்த சில தினங்களாக தொடர் சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று பரவலாக மழை பெய்ததால் மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புக்கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.