அரசு மருத்துவமனையில் செல்ஃபோன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை - இருளில் தவிக்கும் நோயாளிகள் - டார்ச்லைட் ட்ரீட்மென்ட்
உத்தரப் பிரதேசத்தில் பிரதாப்கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செல்ஃபோன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊசி, பேண்டேஜ்கள் போடுவது உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் செல்ஃபோன் டார்ச் வெளிச்சத்திலேயே அளிக்கப்பட்டன. இதை வீடியோ எடுக்க முயன்ற ஈடிவி பாரத் செய்தியாளரின் செல்ஃபோனை மருத்துவமனை அதிகாரிகள் பறிக்க முயன்றனர்.