தமிழ்நாடு பட்ஜெட் 2021: நீதி மேலாண்மை! - தமிழ்நாடு பட்ஜெட் 2021
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும் எனவும், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்குத் தேவையான ஆதரவை இந்த அரசு வழங்குவதுடன், நீதிமன்றங்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைத் திறன்படப் பயன்படுத்துவதற்கும் உதவி புரியும் என்றும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.