திருவண்ணாமலை கோவிலில் தீமிதி திருவிழா - Tiruvannamalai Annamalaiyar Temple
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை தலத்தில், ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய ஆடிப்பூரத்தின் பத்தாம் நாளான இன்று (அக.2) தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 25 கிராமங்களை சேர்ந்த மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களை அம்பாளாக பாவித்து பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் புனித நீராடிய பின், அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களால் பரிவட்டம் கட்டப்பட்டது. பின் அம்பாள் சன்னதி முன்பு எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு எதிரே உள்ள தீக்குண்டத்தில் 3 முறை குயவர் இன மக்கள், உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான சிவ பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.