திருவள்ளூர் வீரராகவர் கோயில் தெப்ப உற்சவம் - முதல் நாள் தெப்ப உற்சவம்
திருவள்ளூர்: வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்திருக்கோயில் ஆனி அமாவாசையை முன்னிட்டு 3 நாட்கள் பெருமாள் மற்றும் தாயார் முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உற்சவம் நேற்று (ஜூன்29) கோலாகலமாக தொடங்கியது. பின் கோயில் அருகில் ஹிருதாப நாசினி குளத்தில், ஆனி மாத முதல் நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில், உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.