திருநாராயணபுரத்தில் வைகாசி பெருவிழா - வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் தாலுகாவில் உள்ள திருநாராயணபுரத்தில் மிகப் பழமையான ஸ்ரீ வேதநாயகி தாயார் சமேத வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த மே.12 முதல் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு பெருமாள் உப நாச்சியார்களுடன் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். அதன் தொடர்ச்சியாக இன்று(மே.22) திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.