கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்... - விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில்,இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 1 அடி முதல் 25 அடி வரையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த சிலைகள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கும் கிழங்கு மாவு மற்றும் வண்ணங்களை வைத்து வடிவமைக்கப்பட்டு வருவதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.