Video: கஞ்சா அடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆட்டோவை எரித்துவிட்டு தப்பிய இருவர்! - cannabis smuggler have disappeared
சென்னை: திருவல்லிக்கேணி நீலம் பாட்ஷா தர்கா தெருவைச் சேர்ந்த அப்பாஸ்(48) என்பவருடைய ஆட்டோவில் அமர்ந்து ஆரிப், அப்துல்லா, கவுஸ் பாஷா ஆகியோர் கஞ்சா அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அப்பாஸின் மனைவி ஆட்டோவில் கஞ்சா அடித்து வந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், 'ஆட்டோவை என்ன செய்கிறேன் என்று பாருங்க' என்று மிரட்டிவிட்டு சென்றதாகவும் ஆத்திரத்தில் விடியற்காலை ஆரிப், அப்துல் உசேன் ஆகியோர் ஆட்டோவை எரித்துவிட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பாஸ் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்து வரும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.