மின்சார வாகன தினம் - எலக்ட்ரிக் வாகனப்பேரணியை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்
உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு எலக்ட்ரானிக் வாகனங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை பந்தய சாலையில் தனியார் நிறுவன பங்களிப்புடன் கோவை மாவட்ட நிர்வாகம் சேர்ந்து இவி ரோட் ஷோ என்ற எலக்ட்ரானிக் வாகன விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தியது. இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.