டாஸ்மாக் கடை திறப்பு: கற்பூரம் ஏற்றிக் கொண்டாடிய மதுப்பிரியர்! - etv news
வேலூர்: காட்பாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் கடையின் முன் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தார். பின்னர், மது வாங்க வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இனிப்பு வழங்கி டாஸ்மாக் திறப்பை கொண்டாடி மது வாங்கிச் சென்றார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.