வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை...டேராடூனில் வெள்ளப்பெருக்கு...அடித்துச்செல்லப்பட்ட பாலம்... - தப்கேஷ்வரில் தம்சா ஆறு
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழையால், ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தலைநகர் டேராடூனில் உள்ள புகழ்பெற்ற தப்கேஷ்வர் கோயில் வழியே பாயும் தம்சா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், தம்சா ஆற்றின் மறுகரையில் உள்ள சந்தோஷி மாதா கோயிலுக்கு செல்லும் இரும்பு பாலம் அடித்து செல்லப்பட்டது. மேலும், தப்கேஷ்வரில் உள்ள பெரிய அனுமன் சிலையைச் சுற்றி இருந்த சிறிய சிலைகள் அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், சந்தோஷி மாதா கோயிலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள மகா வைஷ்ணோவ் தேவி குகைக் கோயிலும் சேதம் அடைந்துள்ளது.