திருச்சி இரண்டாவது தலைநகர் கோரிக்கை- நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து! - திருச்சியை இரண்டாவது தலைநகர் கோரிக்கை
சர்சையா..? சாதனையா..? இரண்டாவது தலைநகர் கோரிக்கை குறித்து இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோரின் கருத்துக்களை கேட்டோம். எல்லாம் சரி திருச்சியை சேர்ந்த உள்ளாட்சி மற்றும் நகர்புற அமைச்சர் நேருவிடம் கேட்கவேண்டாமா... இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என உங்கள் கட்சி எம்.எல்.ஏ பழனியாண்டி கோரிக்கை விடுத்து இருக்கிறாரே அது குறித்து உங்கள் பார்வை என்ன நிதி ஆதாரங்கள் இருக்கிறதா ? என்றோம். அதற்கு, “பேட்டி எல்லாம் வேண்டாம். நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், 1000 கோடி ரூபாய் தேவைப்படும். இப்பொழுதைய நிலையில் இது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். விரைவில் நல்ல முடிவை எடுப்பார். மதியம் மணி 2-ங்க. சாப்டிங்களா, இல்ல சாப்டுட்டு போங்க” என சாப்டாக வழியனுப்பினார்.
Last Updated : Apr 29, 2022, 9:06 PM IST