ஈடிவி பாரத் அலுவலகத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி! - ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ரஜினிகாந்த்
இந்தியாவின் ஆளுமைமிக்க பிரபலங்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஈடிவி பாரத் அலுவலகத்துக்கு வருகை புரிந்தார். தனது படப்பிடிப்புகளுக்கிடையே இன்று ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு வருகை தந்த ரஜினி, ஈடிவி பாரத் செய்தி அலுவலகத்தை பார்வையிட்டு, நிறுவனத்தின் ஊழியர்களைச் சந்தித்துப் பேசினார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாலம், கன்னடம் உள்ளிட்ட இந்தியாவின் 13 மொழிகளில் இயங்கிவரும் தனித்துவம்மிக்க ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்தின் பல்வேறு மாநிலப் பிரிவுகள் குறித்து கேட்டறிந்த ரஜினி, ஈடிவி பாரத்தின் பன்முகத் தன்மையைக் கண்டு வியப்படைந்தார். மேலும், ஈடிவி பாரத் ஒரு மினி இந்தியாவைப் போல் தோற்றமளிப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Last Updated : Jan 5, 2020, 10:17 PM IST