ஞாயிறு ஊரடங்கு: சேலத்தில் பாதுகாப்பு பணியில் 2000 காவலர்கள்! - சேலத்தில் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணி
கரோனா, ஒமைக்ரான் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், சேலம் மாநகரின் முக்கிய இடங்களான சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஐந்து ரோடு புதிய பேருந்து நிலையம், ரயில்வே ஜங்சன், ஏற்காடு பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. காலையில் உழவர் சந்தை வழக்கம் போல் இயங்கியது.