முழு ஊரடங்கு: தமிழ்நாடு-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு - தமிழ்நாடு-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கரோனா, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இன்று (ஜன.9) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கோவையில் உள்ள முக்கிய சாலைகளான காந்திபுரம் 100அடி ரோடு, அவிநாசி சாலை, டவுன்ஹால், லட்சுமி மில்ஸ், உக்கடம் ஆகிய பகுதிகள் வெறுச்சோடி காணப்படுகின்றன. தமிழ்நாடு-கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவரச தேவைகளுக்காக கோவைக்குள் வரும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.