யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை - கல் வீச்சில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்! - காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக்
ஜம்மு காஷ்மீர்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான 'ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி' தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், யாசின் மாலிக்கின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் அருகே தீர்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால், அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இருந்தபோதிலும், போராட்டக்காரர்கள் காவல் துறையினர் மீது கல் வீச்சில் ஈடுபட்டனர்.