'திமுக அரசு சொன்னதைத் தான் செய்யும், செய்வதைத் தான் சொல்லும்' - மீண்டும் உரக்க உரைத்த முதலமைச்சர் ஸ்டாலின் - செங்காடு ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 24) செங்காடு ஊராட்சி அலுவலத்திற்குச்சென்று ஆய்வு செய்தார். பின்னர், தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு,மக்களிடையே கலந்துரையாடினார். அங்கு மக்களின் கோரிக்கைகளை கேட்ட ஸ்டாலின், 'ஏதோ கோரிக்கைகளை கேட்டுவிட்டு, அறிவிப்பை வெளியிட்டேன் என நினைக்க வேண்டாம். திமுக அரசு சொன்னதைத் தான் செய்யும். செய்வதைத் தான் சொல்லும். அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்பதை நானே நேரில் வந்து பார்ப்பேன்' எனத் தெரிவித்தார்.