ஸ்ரீரங்கம்: வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் - சித்திரை தேர்
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதும், 108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாள்கள் 'விருப்பன் திருநாள்' எனப்படும் உற்சவர்கள் வலம் விழா தேர் திருநாள் வரை விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று(ஏப். 26) மாலை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் நம்பெருமாள் சித்திரை தேர் விருப்பன் திருநாளில் வெள்ளி யானை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.