இலங்கையில் நிலவும் நெருக்கடி குறித்து சர்வேஸ்வரனுடன் ஒரு நேர்காணல் - இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பதவி விலக கோரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். அண்மையில் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல், ரணில் பதவியேற்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் நகர்வுகளைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் அங்கு நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி நிலை, அரசியல் சூழல் குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு இலங்கையில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சர்வேஸ்வரன் பகிர்ந்து கொண்ட கருத்துகளை, இக்காணொலியில் காணலாம்.