மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் - Ganesh Chaturthi Puja
புதுச்சேரி: பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று (ஆக. 31) அதிகாலை 04.01 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர், மூலவர் மற்றும் உற்சவருக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வெளிநாட்டு பக்தர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் விடியற்காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.