வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் சலசலப்பு.. இரு சக்கர வாகனத்தில் பாம்பு! - இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் வெளியே, ஒரு நபர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அருகிலிருந்த மரத்திலிருந்து கீழே விழுந்த பாம்பு ஒன்று இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்டுள்ளது. இதனையடுத்து மெக்கானிக் ஒருவரை வரவழைத்து, வாகனத்தின் சீட்டு, சைடு டோர் ஆகியவற்றை கழற்றிய போது வாகனத்திலிருந்து கீழே விழுந்து பாம்பு ஓடியது. அதை அங்கிருந்த சிலர் ஓடிய பாம்பை காலில் மிதித்ததில் பாம்பு இறந்து போனது. இரு சக்கர வாகனத்தில் பாம்பு புகுந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.