Video:'சுத்தத்தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும்': தேனியில் மாஸாக நடந்த சிலம்பம் விழிப்புணர்வு பேரணி! - குறவஞ்சி சிலம்பம்
தேனி: தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருவது 'சிலம்பாட்டக் கலையாகும்'. இந்த கலையினை கற்க தற்போது பலர் ஆர்வம் காட்டாதநிலையில் சிலம்பக் கலையினை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக, தேனியில் சிலம்பாட்ட வீரர்கள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள். இந்தப் பேரணியில் அலங்கார சிலம்பம், போர் சிலம்பம், குறவஞ்சி ஆகிய 3 சிலம்பக் கலைகளை சாலைகளில் செய்து காட்டியபடி அவர்கள் பேரணியாக சென்றது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பேரணியில் கலந்துகொண்டு, தங்களின் சிலம்பத்திறமைகளை வெளிப்படுத்திக்காட்டினார்கள்.