மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க தடை! - bhavanisagar
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பைகாரா மற்றும் கிளன்மார்க் அணை தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுவதால், தெங்குமரஹாடா வழியாக பவானிசாகர் அணைக்கு செல்லும் மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் போக்குவரத்து முடங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.