செந்துறை அருகே மந்தையம்மன் கோயிலில் மாடு மாலை தாண்டும் வினோத நிகழ்ச்சி - Sreemanthayamman Karuttanayakkar temple
திண்டுக்கல்: செந்துறை அருகே பெரியூர்பட்டியில் ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோயிலில் கடந்த 5-ந்தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவின் ஒருபகுதியாக இன்று (ஜூன்15) மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொத்துகொம்பு எல்லைக்கு 200 சாமி மாடுகளை அழைத்து சென்றனர். அங்கிருந்து சாமி மாடுகள் கரடு முரடான பாதையில் கோயிலை நோக்கி விரட்டி வந்தனர். மாடுகளுடன் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடி வந்தனர். பின்னர் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் தரையில் போடப்பட்டு இருந்த வெள்ளை துணியை தாண்ட வைத்தனர்.
TAGGED:
மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி