Video: இருளில் ஹெட்லைட் இல்லாத பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் - பீதியில் பயணித்த பயணிகள்! - விபரீத விளையாட்டு
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கடபா அருகே ஹெட்லைட் எரியாத பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் ஒருவர் 10 கி.மீ. வரை சென்று விபரீத விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். கார்வாரிலிருந்து உப்பினாங்குடிக்கு செல்ல இருந்த பேருந்தின் ஹெட் லைட்கள் ஏற்கெனவே, ஒளிராமல் இருந்ததுள்ளன. இந்த நிலையில் நேற்று (ஏப்.11) இரவு ஓட்டுநர் ஒருவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு, இருட்டிற்குள் பேருந்தை இயக்கியுள்ளதாக அதில் பயணித்த பயணிகள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணி ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். பயணிகளின் வாழ்க்கையோடு விளையாடிய ஓட்டுநரின் இச்செயலுக்குப் பலரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.