பள்ளியின் முன் வேகமாக சென்ற பேருந்தை வழிமறித்த தலைமையாசிரியர் - demands stop for students
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தாழிகோடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்வதாகவும், பள்ளியின் முன் பேருந்துகள் வேகமாக செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளியின் முன் வேகமாக வந்த பேருந்தை வழிமறித்து, வேகமாக செல்லக் கூடாது என எச்சரித்தார். மேலும் பள்ளி அருகே பேருந்தை நிறுத்திச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.