மாரியம்மன் கோயில் திருவிழா: விடிய விடிய நடைபெற்ற காளைகள் இழுக்கும் நிகழ்ச்சி - புஞ்சை புளியம்பட்டி கோயில் திருவிழா
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி காளை இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாரியம்மன் கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்தை சிவனாக பாவித்து வழிபாடு நடத்தியதாகவும், கம்பம் பிடுங்கப்பட்ட இடத்தில் ஒரு காளையை படுக்கவைத்து ஒரு சுற்று சுற்றினால் மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Last Updated : May 13, 2022, 10:36 AM IST