தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி: குடிநீர் தேடி அலைந்து திரியும் காட்டெருமைகள் - குடிநீர் தேடி அலைந்து திரியும் காட்டெருமைகள்

By

Published : May 2, 2022, 2:17 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப் பகுதியில் குடிநீர் தேடி அலைகின்றன.இதன் காரணமாக பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு செல்லும் மண்சாலையில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் கிராமத்திற்குச் செல்லும் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் நிரப்பி வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details