தஞ்சை தேர் விபத்து; சசிகலா நேரில் ஆறுதல் - களிமேடு கிராமத்தில் தேர் திருவிழாவில் விபத்து
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் ஏப்.26ஆம் தேதி நடைபெற்ற அப்பர் கோயில் தேரோட்ட விழாவின்போது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட தேர், உயர் மின் அழுத்த கம்பியின் மீது உரசிய நிலையில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், வி.கே. சசிகலா, இன்று (ஏப்.28) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.